உள்ளடக்கத்துக்குச் செல்

கியாங் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கியாங் மக்கள்என்பவர்கள் சீனாவில் வாழ்கின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீன மக்கள் குடியரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களில் ஓர் இனக்குழுவினர் ஆவர். 2000 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கீட்டின் படி ஏறத்தாழ மூன்று இலட்சம் கியாங் மக்கள் சீனாவில் வசிக்கின்றனர்.[1] இவர்கள் பெரும்பாலும் திபெத்திய பீடபூமியின் கிழக்கு விளிம்பில் சிச்சுவானின் (செக்வான்) வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு மலைப் பகுதியில் வாழ்கின்றனர்.[2][3]

பெயர்கள்

[தொகு]

நவீன கியாங் மக்கள் தங்களை ரமா என அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். இவர்கள் 1950 இல் சீன வார்த்தையான "கியாங் இனம்" என அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்டனர்.[2]

வரலாறு

[தொகு]

கியாங் என்று அழைக்கப்படும் மக்கள் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரக்கிள் எலும்புக் கல்வெட்டுகள் மற்றும் பண்டைய சீன நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த சொல் நவீன கியாங் மக்களை தவிர பல்வேறு குழுக்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. முன்னர் கியாங் என்று சீன நூல்களில் குறிப்பிடப்பட்ட பல இனக்குழுவினர் படிப்படியாக மறுவகைப்படுத்தப்பட்டனர். மிங் மற்றும் குயிங் வம்சங்களால், "கியாங்" என்ற வார்த்தையானது மேல் மின் நதி பள்ளத்தாக்கு மற்றும் பெய்ச்சுவான் பகுதியில் வசிக்கும் ஹான் அல்லாத மக்களை குறிக்க பயன்படுத்தப்பட்டது.[4] ஆயினும்கூட பெரும்பாலான நவீன புலமைப்பரிசில்கள் நவீன கியாங் மக்கள் வரலாற்று கியாங் மக்களிடமிருந்து வந்த வழித்தோன்றல்கள் என கருதுகின்றன.[5]

1950 இல் கியாங் அதிகாரப்பூர்வமாக ஒரு இனக்குழுவாக அங்கீகரிக்கப்பட்டபோது, இவர்கள் எண்ணிக்கையில் 35,600 பேர் மட்டுமே இருந்தனர். சிறுபான்மை இனங்களுக்கான பொருளாதார மானிய அரசாங்கக் கொள்கையின் காரணமாக பலர் கியாங் அந்தஸ்தைப் பெற முயன்றனர்.[4] இதன் விளைவாக பல மக்கள் தங்களை கியாங் என மறுவகைப்படுத்திக் கொண்டனர்.[6] 1982-90 வரை, 75,600 ஹான் மக்கள் தங்கள் இனத்தை கியாங் என்றும், 1990-2000 வரை 96,500 ஹான் மக்கள் கியாங் என்றும் மறுவகைப்படுத்திக் கொண்டனர். மொத்தத்தில், ஏறத்தாழ இரண்டு இலட்சம் ஹான் மக்கள் கியாங் என்று மறுவகைப்படுத்திக் கொண்டனர். இதன் விளைவாக, 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி மூன்று இலட்சத்துக்கும் மேலான கியாங் மக்கள் இருந்தனர். இவர்கள் பெரும்பாலும் சிச்சுவானில் வசித்து வருகின்றனர்.[5]

12 மே 2008 அன்று, கியாங் மக்கள் 2008 சிச்சுவான் நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர், ஏனெனில் கொல்லப்பட்டவர்களில் 30,000 க்கும் அதிகமானோர் கியாங் இனத்தைச் சேர்ந்தவர்கள் (மொத்த கியாங் மக்கள்தொகையில் 10 சதவீதம்).[7]

மொழிகள்

[தொகு]

கியாங் மக்கள் திபெத்திய-பர்மிய மொழிகளின் துணைக் குடும்பமான, ஒருங்கிணைந்த கியாங்கிக் மொழி பேசுகின்றனர்.[8] இருப்பினும், பல்வேறு கியாங் மக்களின் பேச்சுவழக்குகள் மிகவும் வேறுபட்டவை, எனவே வெவ்வேறு கியாங் குழுக்களுக்கு இடையிலான தொடர்பு பெரும்பாலும் மாண்டரின் மொழியில் இருக்கும். பாரம்பரியமாக கியாங் பேச்சுவழக்குகள் வடக்கு கியாங் மற்றும் தெற்கு கியாங் என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன..[2]

கலாச்சாரம்

[தொகு]

கியாங் மக்கள் இன்று பெரும்பாலும் மலை பகுதிகளில் வசிக்கின்றனர். ஒரு கோட்டை கிராமம், 30 முதல் 100 குடும்பங்களைக் கொண்டது. ஒரு மலை ஓடையில் ஒரு சிறிய பள்ளத்தாக்கில் சராசரியாக இரண்டு முதல் ஐந்து கோட்டை கிராமங்கள் உள்ளன மற்றும் ஒரு கோட்டை கிராமத்தில் வசிப்பவர்கள் சமூக வாழ்க்கையில் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர். இந்த சிறிய பள்ளத்தாக்குகளில், மக்கள் சிற்றோடைகளின் அருகே சமவெளிகளை பயிரிடுகிறார்கள். மேலும் உணவிற்காக விலங்குகளை வேட்டையாடுகிறார்கள் மற்றும் பக்கத்து காடுகளில் காளான்கள் சேகரிக்கிறார்கள், மேலும் மலையின் மேல் மேய்ச்சல் நிலங்களில் யாக் மற்றும் குதிரைகளை மேய்க்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் கடந்த காலத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல் கோபுரங்கள் இருந்தன, மேலும் இந்த இமயமலை கோபுரங்கள் இன்னும் சில கியாங் கிராமங்களில் ஒரு தனித்துவமான அம்சமாக இருக்கின்றன.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "中华人民共和国国家统计局 >> 第五次人口普查数据". www.stats.gov.cn. பார்க்கப்பட்ட நாள் 2019-05-04.
  2. 2.0 2.1 2.2 LaPolla, Randy J.; Huang, Chenglong (2003). A Grammar of Qiang: With Annotated Texts and Glossary. Mouton de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3110178296.
  3. Kang, Xiaofei; Sutton, Donald S. (2016). Contesting the Yellow Dragon: Ethnicity, Religion, and the State in the Sino-Tibetan Borderland. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-31923-3.
  4. 4.0 4.1 Wang Ming-ke. "From the Qiang Barbarians to the Qiang Nationality: The Making of a New Chinese Boundary". Archived from the original on 2021-05-16. பார்க்கப்பட்ட நாள் 2024-03-02.
  5. 5.0 5.1 Wen, Maotao (2014). The Creation of the Qiang Ethnicity, its Relation to the Rme People and the Preservation of Rme Language (Master thesis). Duke University.
  6. "Qiang, Cimulin" (PDF). Archived from the original (PDF) on September 26, 2007.
  7. Dooley, Ben (14 May 2018). "Nearly wiped out by quake, China's Qiang minority lives on". AFP – via MSN News.
  8. Concise Encyclopedia of Languages of the World.
  9. Daniel McCrohan (19 August 2010). "The inside info on China's ancient watchtowers". Lonely Planet. Archived from the original on 2 April 2013.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியாங்_மக்கள்&oldid=4108300" இலிருந்து மீள்விக்கப்பட்டது